பெண்ணின் கழுத்தில் இருந்து 10 சவரன் நகை பறிப்பு : வீட்டு பணிக்கு வந்த சிறுவன் தப்பியோட்டம்..!!!
Author: Udayachandran RadhaKrishnan9 செப்டம்பர் 2024, 7:59 மணி
தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பன்னிமடை அருகே ஆர் ஆர் அவென்யூ குடியிருப்பில் புதியதாக குடிவந்துள்ள பார்வதி 64. வீட்டின் வேலைக்காக பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற சிறுவனை வேலைக்கு வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று சுமார் மாலை 05:30 மணி அளவில் வீட்டின் வெளியில் யாருமில்லாத போது அந்த வயதான முதியோர் கழுத்தில் அணிந்திருந்த பத்து பவுன் தாலி கொடியை பறித்துச் சென்றுள்ளார்.
உடனே தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைத்து சிறுவனை மூன்று மணி நேரத்தில் கைது செய்து அவரிடம் இருந்த 10 பவுன் தாலி கொடியையும் கைப்பற்றியுள்ளனர்.
Views: - 194
0
0