அன்னபூர்ணா விவகாரம்.. பாஜகவினர் மீது அண்ணாமலை கோபம் : லண்டனில் இருந்து பரபர அறிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
13 செப்டம்பர் 2024, 1:25 மணி
Apology
Quick Share

கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.

இது பெரும் விவாதத்தை உண்டாக்கியது. அவர் கேள்வி கேட்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் மன்னிப்பு கோரினார்.

நிதியமைச்சரிடம் நேரில் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் அவர் தான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை, மன்னித்துக் கொள்ளுங்கள் என பேசியிருந்தார்.

இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதையடுத்து வணிகர்களுக்கு மிஞ்சியது அவமானம் மட்டுமே என காங்., தலைவர் கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டனில் இருந்து மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நிர்மலா சீதாராமனுடன் அன்னபூர்ணா நிறுவனர் பேசிய வீடியோ வெளியானதற்கு மன்னிப் கோருகிறேன். வீடியோ வெளியிட்டதற்காக ஓட்டல் உரிமையாளரிடம் வருத்தம் தெரிவித்தேன்.

மேலும் படிக்க: நிதியமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா உரிமையாளர் : வைரலான வீடியோ… வெளுத்து வாங்கிய காங்கிரஸ்!!

சீனிவாசன் தமிழகத்தின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார், மாநில மற்றும் நாட்டின் பொருளதார வளர்ச்சிக்கு பங்களிப்பை கொடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து வைக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், பாஜக யாரையும் மன்னிப்பு கேட்க சொல்லி கட்டயாபடுத்தவில்லை, சீனிவாசன் தாமாக முன் வந்து மன்னிப்பு கேட்டார், அதை யாரோ வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Nithyananda Ranjitha நித்யானந்தா உடன் தான் இருக்கிறேன்.. ரஞ்சிதா வெளியிட்ட பகீர் தகவல்!
  • Views: - 199

    0

    0