‘போட்ரா வெடிய’: இன்றும் தங்கம் விலை சரிவு!!!

12 November 2020, 11:24 am
gold rate 10- updatenews360- updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவே இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்றும் குறைந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுமாகவே இருந்து வந்தது. இதன் காரணமாகவே, கடந்த வாரம் சவரன் தங்கம் ரூ. 39,000த்தை தாண்டியது. பின்னர், யாரும் எதிர்பார்க்காத விதமாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,248 கிடுகிடுவென சரிந்தது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்தே காணப்பட்டது. காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.38,016க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.12 சரிந்து ரூ.4,752-க்கு விற்பனையாகி வருகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது, தங்கம் வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாயிருந்தது. ஆனால், தற்போது, அனைத்தையும் உதறி தள்ளி விட்டு, பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடும் மனநிலையை இந்த விலை குறைவு ஏற்படுத்தியுள்ளது.