‘அப்படி போடு…. ரகிட ரகிட ரகிட’ : இன்றும் சரிவை நோக்கியே தங்கத்தின் விலை..!!

18 November 2020, 11:05 am
gold rate 10- updatenews360- updatenews360
Quick Share

நேற்று இறங்குமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இன்றும் குறைந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுமாகவே இருந்து வந்தது. இதன் காரணமாகவே, கடந்த வாரம் சவரன் தங்கம் ரூ. 39,000த்தை தாண்டியது. பின்னர், யாரும் எதிர்பார்க்காத விதமாக, கடந்த வாரம் தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்து வந்தது. இதனால், தங்கம் விலை மீண்டும் ரூ.39,000த்திற்கு கீழாக சென்றது.

இந்த மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடிய மக்களுக்கு, பண்டிகை முடிந்த மறுநாளே, விலை உயர்ந்து தங்கம் விலை அதிர்ச்சி கொடுத்தது. இதைத் தொடர்ந்து, நேற்று சரிவை நோக்கி காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்றும் குறைந்தே காணப்பட்டுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4784 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 சரிந்து ரூ.38,272க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.600 குறைந்து 68,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

1 thought on “‘அப்படி போடு…. ரகிட ரகிட ரகிட’ : இன்றும் சரிவை நோக்கியே தங்கத்தின் விலை..!!

Leave a Reply