‘தங்கம் வாங்க நினைப்பவர்கள் இப்பவே முந்துங்க’ : சவரனுக்கு ரூ.440 சரிவு..!

7 October 2020, 12:09 pm
gold rate 10- updatenews360- updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று கிடுகிடுவென குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

இதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும், இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது

கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.38,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.55 சரிந்து ரூ.4,805-க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.40 குறைந்து ரூ.62.90க்கு வர்த்தகமாகிறது.