மகிழ்ச்சியை வெடி வைத்து தகர்த்த தங்கம் விலை : இன்று ரூ. 216 உயர்ந்து அதிர்ச்சி..!!

13 November 2020, 11:02 am
Gold Rate - Updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுமாகவே இருந்து வந்தது. இதன் காரணமாகவே, கடந்த வாரம் சவரன் தங்கம் ரூ. 39,000த்தை தாண்டியது. பின்னர், யாரும் எதிர்பார்க்காத விதமாக, இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,248 கிடுகிடுவென சரிந்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த 3 தினங்களாக தங்கம் விலை குறைந்தே காணப்பட்டது. இந்த நிலையில், நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.38,304க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.27 அதிகரித்து ரூ.4,788-க்கு விற்பனையாகி வருகிறது.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியிருப்பது, தங்கம் வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாயுள்ளது.