‘இதுக்கு ஒரு முடிவே இல்லையாப்பா…’ : இன்று ஒரே நாளில் ரூ.288 அதிகரிப்பு!!

15 September 2020, 11:31 am
gold - updatenews360
Quick Share

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

இதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும் இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது

அந்த வகையில் தங்கத்தின் விலை நேற்றைய தினம் போலவே, இன்றும் உச்சமடைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.39,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.36 குறைந்து ரூ.4,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply