அதிகாரம் மட்டும் கிடைத்தால்.. அசந்தே போவீங்க : கோவையில் சவால் விட்ட அன்புமணி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 செப்டம்பர் 2024, 11:34 காலை
anbumani
Quick Share

கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையை கொண்டு வந்து அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் என தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கையில் நல்லதும் உள்ளது மாநிலத்திற்கு பாதகங்களும் உள்ளது என தெரிவித்தார். உதாரணமாக மும்மொழிக் கொள்கையை எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டிற்கு தேவையானது இரு மொழிக் கொள்கை எனவும் இது போன்று பாதகமான விஷயங்களெல்லாம் இருப்பதாகவும் கூறினார்.

மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்க கூடாது என கூறிய அவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவம் உள்ளது ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொள்கை முடிவு எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தார்.

இந்திரா காந்தி Emergency Period யில் கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு எடுத்து சென்றதால் தான் இந்த பிரச்சனையே வந்தது என கூறினார்.

கல்வி என்பது மீண்டும் மாநில பட்டியலில் வரவேண்டும் எனவும் அப்படி வந்தால் ஒவ்வொரு மாநிலமும் அதற்கான கொள்கையின் அடிப்படையில் முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு கல்விக் கொள்கையை திணிக்க கூடாது, ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதியை தர மாட்டோம் என்றும் கூறக்கூடாது என கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடத்தில் போதை பொருட்கள் சுமார் ஐந்து மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறைக்கு தெரியாமல் எதுவும் நடக்காது எனவும் கூறினார்.

இது பற்றி முதலமைச்சரிடமும் பலமுறை வலியுறுத்தி இருப்பதாகவும் ஆனால் முதலமைச்சர் ஏதோ பெயருக்கென்று ஒரு கூட்டத்தை கூட்டி எதையோ படித்து விட்டு நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறிவிடுகிறார் என தெரிவித்தார்.

பள்ளிக்கூடம் கல்லூரிகளுக்கு வெளியிலேயே போதைப் பொருட்கள் கிடைப்பதாகவும் இரண்டு தலைமுறையினரை இதற்கு அடிமையாக்கி நாசம் ஆக்கிவிட்டதாகவும் தெரிவித்த அன்புமணி ராமதாஸ் அடுத்த தலைமுறையை பார்த்தால் தமிழ்நாட்டில் தான் அதிகமாக அடிமையாகி வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன்.. மகனை வாழ வைக்க காவலர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!!

ஒரே நாளில் அதிக கொலைகள் நடக்கிறது அதற்கு காரணம் போதைப் பொருட்கள் தான் எனவும் கூறிய அவர் முதலமைச்சர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் எங்களிடம் அதிகாரம் இருந்தால் ஒரு மாதத்தில் இதனை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்த அவர் பத்து அல்லது ஐந்து காவல் துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தால் போதும் அப்பொழுதுதான் பயம் வரும் எனவும் காவல்துறைக்கு தெரியாமல் நடப்பதில்லை எனக் கூறினார்.

இந்தியாவிலேயே அதிக மது கடைகள் இருக்கின்ற மாநிலம் அதிக சாலை விபத்துக்கள் நடக்கின்ற மாநிலம் அதிகமான இளம் விதவைகள் இருக்கின்ற மாநிலம் அதிக கல்விக் கடன் பிரச்சனை இருக்கின்ற மாநிலம் அதிக தற்கொலைகள் நடக்கின்ற மாநிலம் அதிக மனநல நோய் உள்ள மாநிலம் தமிழ்நாடு என தெரிவித்த அவர் இதற்கெல்லாம் காரணம் மது தான் என குறிப்பிட்டார்.

தமிழ்நாடு இளைஞர்களால் மது இல்லாமல் இருக்க முடியாது என்ற சூழலை உருவாக்கி இருப்பது தான் திராவிட மாடல் என விமர்சித்த அவர் இவர்கள் மதுவை விற்பனை செய்யாமல் திணிப்பதாக சாடினார்.

இந்த மது பிரச்சினை குறித்து திருமாவளவன் தற்பொழுதாவது ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் திருமாவளவன் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு முதலில் அழைப்பு விடுக்கட்டும் என பதில் அளித்தார்.

குரங்கம்மை நோய் குறித்து மக்கள் பயப்பட வேண்டாம்இந்தியாவில் ஒருவருக்கு தொற்று இருப்பது வேறு வேரியண்ட் இருப்பினும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தமிழக அரசும் இதற்கு நடவடிக்கை எடுத்து வருவதை சுட்டி காட்டினார்.

தமிழ்நாட்டில் திமுக அதிமுக வருவதற்கு முன்பு 42 ஆயிரம் ஏரிகள் இருந்ததாகவும் தற்பொழுது 22 ஆயிரம் ஏரிகள் தான் இருப்பதாகவும் தெரிவித்த அவர் அதில் ஐந்தாயிரம் ஏரிகளை மொத்தமாக காணவில்லை வடிவேலு படத்தில் கிணற்றை காணவில்லை என்பதை போல் ஐந்தாயிரம் ஏரிகளை முழுமையாக காணவில்லை என கூறினார்.

இதுவரை இருந்த அமைச்சர்கள் ஏரிகளை அழித்துவிட்டு திட்டங்களை கொண்டு வந்ததாகவும் சென்னை உயர்நீதிமன்ற கிளை, வள்ளுவர் கோட்டம், நேரு ஸ்டேடியம், கோயம்பேடு பேருந்து நிலையம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவை எல்லாம் ஏரியில் தான் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் ஏரியின் முக்கியத்துவம் பற்றி தற்பொழுது வரை இவர்களுக்கு தெரியவில்லை எனவும் காலநிலை மாற்றம் வந்து விட்டதாகவும் பத்தாண்டுகளுக்கு ஓரளவு மழை பெய்யும் அதற்கு மேல் கடுமையான வறட்சி நிலவும் என ஐநா சபை நிபுணர்கள் தெரிவிப்பதாக கூறினார்.

எனவே அந்த நிலை வருவதற்கு முன்பே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ஏரி குளங்களை பாதுகாக்க வேண்டும், மழைக்காலங்களில் தண்ணீரை சேமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அத்திக்கடவு அவினாசி திட்டத்தை கொண்டு வருவதற்கு இவர்களுக்கு 70 ஆண்டு காலங்கள் ஆகிவிட்டதாகவும், காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே அதனை நடத்தியிருந்தால் 19 கோடியில் திட்டம் நிறைவேறி இருக்கும் ஆனால் தற்போது வரை முழுமையாக நிறைவு பெறவில்லை என்றார்.

எனவே சாராயத்தில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு நீர் நிலைகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு என்பது அவசியம் என தெரிவித்த அவர் சமீபத்தில் நடந்தது, உடல் ஊனமுற்றோர் குறித்து பேசியதை இழிவாக கருதுவதாக தெரிவித்தார்.

தற்பொழுது உள்ள பிள்ளைகளுக்கு நல்ல கருத்துக்களை கூறுவது அவசியம் எனவும் தற்பொழுது உள்ள இளைய சமுதாயத்தினர் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை ஆனால் சொல்கின்ற விதத்தில் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவித்தார்.

மேலும் எந்த கட்சியினர் மாநாடு நடத்தினாலும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 205

    0

    0