இளம்பெண் பாலியல் சம்பவத்தில் கோவாவில் தலைமறைவான ஜானி… சுற்றி வைளைத்த போலீஸ்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 செப்டம்பர் 2024, 1:25 மணி
Jani
Quick Share

தமிழ் தெலுங்கு திரையுலகில் நடன இயக்குநராக பணியாற்றி வருபவர் ஜானி மாஸ்டர். புகழ பெற்ற சினிமா பாடல்களுக்கு நடனமைத்த ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் அவர் மீது இளம் பெண் நடன இயக்குநர் பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார்.

சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.

இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது.

மேலும் படிக்க: சூட்கேஸில் துண்டு துண்டாக கிடந்த பெண்ணின் சடலம்.. விசாரணையில் பகீர்… சென்னையில் ஷாக்!

தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஜானி மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் நர்சிங்கி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து தலைமறைவான ஜானியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கோவாவில் தலைமறைவாக இருந்த அவரை தெலுங்கானா போலீசார் தற்போது கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 154

    0

    0