இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே. AVID படத்தொகுப்பு, Dolby ஆடியோ என பல தொழில்நுட்பங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வாறு இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய பங்கை அளித்தவர் கமல்ஹாசன்.
ஆனால் ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்பட்ட சினிமா விழா ஒன்றில் கமல்ஹாசனை அழைப்பு விடுக்கவில்லை என்று தற்போது ஒரு புகார் எழுந்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் Waves சினிமா விழா தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அக்சய் குமார், அல்லு அர்ஜூன், மோகன் லால், ஐஸ்வர்யா ராய், ராஜமௌலி, சிரஞ்சீவி, ஆலியா பட் உட்பட பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில் கலந்துகொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்த காரணத்தினால்தான் கமல்ஹாசன் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லையாம்.
கமல்ஹாசன் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளார் என்ற காரணத்திற்காகவே அவரை அழைக்கவில்லை என்று ரசிகர்கள் பலரும் கொந்தளித்து வருகின்றனர். அதே போல் நடிகர் பிரித்விராஜிற்கும் அழைப்பு வரவில்லை என்று கூறப்படுகிறது. பிரித்விராஜ் இயக்கிய “எம்புரான்” திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் பலமாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.