மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் கட்டமைப்பை முழுவதும் மாற்றி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீநகர்: முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி. முன்னதாக, 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரானது போலவே, முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி (PDP) 28 இடங்களில் வென்று, பாஜக உடன் கூட்டணி அமைத்து, அவரும் முதல் முறையாக எப்போதும் சர்ச்சையான அரசியலில் இருக்கும் ஜம்மு காஷ்மீரின் முதல்வராக முப்தி முகம்மது சையது மாறினார்.
பின்னர், 2015ஆம் ஆண்டு, ஜம்மு – காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சையது உடல் நலக்குறைவால் காலமாக, அம்மாநிலம் ஆளுநர் ஆட்சிக்கு கீழ் வந்தது. இதனையடுத்து, 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஜம்மு – காஷ்மீரின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையுடன் மெகபூபா முப்தி முதல்வரானார். ஆனால், இதில் பாஜக உடன் கூட்டணியில் இருந்தது பிடிபி. ஆனால், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கு ஆதரவு அளிக்காததால், பாஜக தனது ஆதரவை திரும்பப் பெற்றது.
இதனால், மீண்டும் ஜம்மு காஷ்மீர் ஆட்சி ஆளுநருக்கு கீழாக வந்தது. பின்னர், அவர் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டு, தேசிய அளவில் கவனம் பெற்றார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 18, 26 மற்றும் அக்டோபர் 1 ஆகிய 3 நாட்கள் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கூட்டணி, பாஜக என இருமுனைப் போட்டி நிலவியது. இந்த ரேஸில் மெகபூபா முப்தி மகளும் களமிறக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளின்படி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42, பாஜக 29, காங்கிரஸ் 6, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 3, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ் கம்யூனிஸ் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை தலா ஒரு இடம் மற்றும் 7 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். இதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி அமைத்தது.
இதையும் படிங்க: தம்பியால் அண்ணனை விளாசும் நெட்டிசன்கள்.. தவெக மாநாட்டில் அஜித்!
அப்போது வெற்றி பெற்ற கூட்டணிக்கு மெகபூபா முப்தி வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் தகர்க்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்கள் உடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் புதிய பொறுப்புகள், பிரிவுகள் ஆகியவற்றை உருவாக்கி கட்சியை பலப்படுத்த உள்ளதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.