ரெட் அலர்ட் வாபஸ்.. கரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

Author: Hariharasudhan
17 October 2024, 10:58 am

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

சென்னை: சென்னைக்கு நேற்று முன்தினம் அதி கன மழையைப் பொழிய காரணமாக இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது. இதனையடுத்து, வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடற்கரை வழியாக, புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே, சென்னைக்கு வடக்கே இன்று காலை 4.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து, தென் ஆந்திர கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் கடலோரம் உள்ளே செல்கிறது.

இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை விடுக்கப்பட்டிருந்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என 4 மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்துள்ளனர்.

Chennai Rain

இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று (அக்.17) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். முக்கியமாக, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனையடுத்து, நாளை (அக்.18) முதல் வருகிற 22ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க: பூர்விகா மொபைலில் திடீர் ரெய்டு… ஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை..!!

மேலும், இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரையில் வடதமிழக கடலோரப் பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 160

    0

    0