“இது என்னடா புதுக் கணக்கா இருக்கு“ : ஐசிசி விதிகளால் முதலிடத்தை இழந்த இந்திய அணி!!

20 November 2020, 7:49 pm
India Test - Updatenews360
Quick Share

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை இழந்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப்பட்டியல் புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தை தீர்மானிப்பர். இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் விதிகளை ஐசிசி மாற்றியுள்ளது. இதன் காரணமாக முதலிடத்தில் இருந்த இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் இருந்து ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. வெற்றி சதவீததை புள்ளிகள் அட்டவணையாக அல்லாமல், ஐசிசி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் தரவரிசையின் அடிப்படையாக ஆக்கியுள்ளது.

இதில் வெற்றி சதவீதம் அதிகமாக இருக்கும் அணி, முதலிடத்தில் இருக்கும். அதன்படி தற்போது இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவின் வெற்றி சதவீதம் 75 ஆகவும், ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவீதம் 82.22 ஆக உள்ளது.

புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி 360 புள்ளிகளும், ஆஸ்திரேலிய அணி 296 புள்ளிகளும் எடுத்துள்ளது. ஆனால் ஐசிசி விதிகள் மாற்றப்பட்டுள்ளதால் எதிர்வரும் இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முக்கியம் வாய்ந்ததாக கருதப்பட்டுள்ளது.