ஓட்டலில் அறை எடுத்து 20 நாட்களாக சிறுமியை சீரழித்த இளைஞர் : இன்ஸ்டாகிராம் நண்பனால் வந்த வினை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 செப்டம்பர் 2024, 3:36 மணி
Instagram
Quick Share

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் பைன்சாவைச் சேர்ந்த மைனர் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

சில வருடங்கள் நண்பனாக நடித்து பேசி அந்த பெண் அவனை முழுவதுமாக நம்பும் விதமாக செய்து ஐதராபாத்திற்கு வரவழைத்துள்ளார்.

பின்னர் நாராயணகூடாவில் உள்ள ஓட்டலில் ஓயோ செயலி மூலம் அறை பதிவு செய்து அதில் கடந்த 20 நாட்களாக ஒரு அறையில் வைத்து தனது உண்மை வடிவத்தை வெளிப்படுத்திய அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்வதாகவும் மிரட்டி பாலியியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த பெண் திருமணம் செய்து கொள்ளும்படி வற்பூறுத்தியதால் இறுதியாக ஞாயிற்றுக்கிழமை அந்த இளைஞர் அறை பூட்டு கொண்டு வெளியே சென்றபோது தைரியமான பெண், ஓட்டல் ஊழியரின் செல்போனில் இருந்து தனது பெற்றோருக்கு போன் செய்து நடந்ததை கூறி வாட்ஸ்அப் மூலம் தற்போதைய இருப்பிடத்தைப் பகிர்ந்து கொண்டார்.

சிறுமியின் பெற்றோர் உடனடியாக பெண் போலீசார் உதவியுடன் நாராயணகுடாவில் உள்ள ஓட்டலில் இருந்து சிறுமியை மீட்டனர். பெற்றோரை பார்த்ததும் சிறுமி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு கதறினார்.

இது குறித்து நாராயணகுடா காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 301

    0

    0