விஜய் எனக்கு யாருனே தெரியாது… கைகூப்பி கும்பிட்டு போட்டு நழுவிய பிரபல அரசியல் கட்சி பிரமுகர்!
Author: Udayachandran RadhaKrishnan3 September 2024, 8:06 pm
நடிகர் விஜய் யாருனே தெரியாது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பிரபல அரசியல் கட்சி பிரமுகர் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதற்றத்துடன் இரு கரம் கூப்பி அவர் யார் என்பதும் எனக்கு தெரியாது அந்த ஆள் யார் என மழுப்பலாக பதிலளித்தார்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் அவர் தெரிவித்ததாவது மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறித்து வருகிறது.
இதற்கு ஆளுநர்களை கருவியாக பயன்படுத்துகிறது. எனவே ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
கொல்கத்தா பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பாஜக இந்த போராட்டத்தை அரசியலாக்கி கொச்சைப்படுத்தி விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
0
0