திமுக துணைத்தலைவரால் அவமதிக்கப்பட்ட ஊராட்சிமன்ற தலைவி…பாஜகவில் இணைந்தார்…!!

Author: Aarthi
12 October 2020, 1:42 pm
bjp join - updatenews360
Quick Share

சிதம்பரம்: சாதி வெறி காரணமாக திமுக துணை தலைவரால் அவமதிக்கப்பட்ட திமுக ஊராட்சிமன்ற தலைவி தன்னை பாஜகவில் இணைந்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. பட்டியலினத்தை சேர்ந்த இவர், துணைத் தலைவராக உள்ள மாற்று சமூகத்தை சேர்ந்த மோகன்ராஜன் என்பவரால் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி மற்றும் அதே சமூகத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் சுகந்தி ஆகியோரை ஊராட்சி கூட்டங்களில் தரையில் அமர வேண்டும், தேசியக்கொடியை ஏற்றக்கூடாது எனவும், ஊராட்சி நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஊராட்சி மன்ற தலைவரை எந்த பணியையும் செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. சாதிவெறியுடன் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் திமுக ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜ்.

இந்நிலையில் ஜுலை 17ம் தேத நடைபெற்ற ஊராட்சி கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இக்கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்நிலையில், திமுக கட்சியை சேர்ந்த துணைத்தலைவரால் அவமதிக்கப்பட்ட ஊராட்சிமன்ற தலைவி, தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

Views: - 39

0

0