இந்து மதம்னா அவ்வளவு இழிவாப் போயிடுச்சா…? இதுக்குப் பேரு வெறுப்பு அரசியல் இல்லையா..? திருமாவளவனை எச்சரிக்கும் பாஜக..!!

Author: Babu Lakshmanan
24 January 2022, 11:48 am
Quick Share

சென்னை : இந்து கோவில்களை இழிவுபடுத்துவது போன்று பேசியது வெறுப்பு அரசியல் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை பாஜகவினர் எச்சரித்து வருகின்றனர்.

அரியலூரில் மதமாற்றம் செய்யுமாறு நெருக்கடி கொடுத்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தற்கொலைக்கு காரணமாக கிறிஸ்துவ பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பாஜகவினரின் இந்தப் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Thirumavalavan- updatenews360

மேலும், மதமாற்ற அழுத்தத்தால் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மதமாற்றம் ஏதும் நடக்கவில்லை என்றும், இந்து அமைப்புகள்தான் வெறுப்புப் பிரசாரம் செய்வதாகவும் கூறினார். அதோடு, சனாதன சக்திகளை வேரறுக்க வேண்டும் என்றும் கூறியதாகத் தெரிகிறது. அவரது இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சனாதன தர்மம் என்பது ஹிந்து தர்மம் என்றும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டே பெரும்பான்மையான மதத்தை அழிக்க வேண்டும் எனக் கூறிய, அவரது எம்.பி பதவியையும் பறிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியதாவது :- சனாதன தர்மத்தை (ஹிந்து மதத்தை) ஒழிப்போம் என்ற வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்து கடவுள்களை இழித்து பேசுபவர்களுக்கு எதிராக மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்று கூறி வெறுப்பை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இது போன்ற வெறுப்பு பேச்சுக்கு எதிராகநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றால், முதல் நடவடிக்கை திருமாவளவன் அவர்களே, தங்கள் மீது தான் பாயும் என்று அறிந்து கொள்ளுங்கள்.

மற்ற மதங்களை சேர்ந்த கடவுள்களை சாத்தான்கள் என்றும், தங்களின் மதத்தை பின்பற்றுபவர்களை தவிர மற்றவர்கள் புனிதமற்றவர்கள்,என்று சொல்லும் மத அடிப்படைவாதிகளின் மீது சட்டம் பாயட்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் வாகனத்தில் சென்று தங்களின் மதத்திற்கு அவர்களை மாற்ற, ஒரு மதத்தின் மீது அவதூறு மற்றும் ஏமாற்று, மோசடி பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை பாயட்டும்.

விரைவில், உங்கள் கட்சியின் உறுப்பினர்கள் வெறுப்பு பிரச்சாரத்தை தடுக்க, மதமாற்ற தடை சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை சட்டசபையில் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். உங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க, இனி ஹிந்து மதம் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை கைவிடுங்கள், என தெரிவித்துள்ளார்.

Views: - 1052

1

0