16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

26 September 2020, 2:23 pm
RAIN 1 - updatenews360
Quick Share

சென்னை : தர்மபுரி, சேலம் உள்பட 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். புதுச்சேரி, காரைக்காலிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 6

0

0