திமுகவின் 100 நாள் பிளானை நாறடிக்கும் நெட்டிசன்கள் : தேசிய அளவில் டிரெண்டாகும் #100நாள்நாடகம் ஹேஷ்டேக்…!!!

30 January 2021, 3:50 pm
100 days stalin - updatenews360
Quick Share

சென்னை : மக்களின் பிரச்சனையை 100 நாட்களில் தீர்த்து வைப்பதாக ஸ்டாலின் கூறி வரும் நிலையில், டுவிட்டரில் அதனை விமர்சித்து தேசிய அளவில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஒன்றிணைவோம் வா, விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல், கிராம சபைக் கூட்டம் என பல்வேறு கோணங்களில் திமுக பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்னும் பிரச்சாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார். இந்தப் பிரச்சாரத்தில் 100 நாட்களில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதாக அவர் உறுதியளித்து வருகிறார்.

CPR Stalin -Updatenews360

கடந்த 22 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த திமுக இதுவரை செய்யாததை, இந்த 100 நாட்களில் ஸ்டாலின் செய்வார் என பொய் பிரச்சாரம் செய்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.

இதேபோல, முந்தை ஆட்சிகால அறிவிக்கப்பட்ட தேர்தல் கால அறிவிப்புகளை பட்டியலிட்டு, எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர் இந்த நாட்டிலே? தமிழ் நாட்டிலே,” எனக் கிண்டலாக கூறியிருந்தார். இதுபோன்ற கேள்விகளை மேலும் பல அரசியல் தலைவர்களும் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், 100 நாள் நாடகம் என்று ஸ்டாலினின் புதிய தேர்தல் பிரச்சார முன்னெடுப்பை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

Views: - 30

0

0