தமிழகத்தில் கொரோனா தந்த ‘பெரிய’ அதிர்ச்சி…! ‘முதல் முறையாக’ நடந்த சம்பவம்
3 August 2020, 9:49 pmசென்னை: தமிழகத்தில் முதல் முறையாக இன்று ஓரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதையடுத்து, இன்று மட்டும் 5,609 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,63,222 பேராக உயர்ந்தது. அதே நேரத்தில் இன்று 5,800 பேர் கொரோனாவில் இருந்து குணம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர்.
முன் எப்போதும் இல்லாத வகையில் இன்று 109 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 86 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை கூறி உள்ளது.
சென்னையில் மேலும் 1,021 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 4,588 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு ஒரு பக்கம் அதிகரித்தாலும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி இருப்பது, ஆறுதல் அளிப்பதாக உள்ளது.