12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : நீலகிரி மாவட்டத்தை இன்றும் புரட்டியெடுக்கப் போகும் கனமழை..!

12 August 2020, 12:54 pm
Heavy rain - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை மற்றும் தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல், வடகிழக்கு அரபிக் கடல், மகாராஷ்டிரா, கோவா, தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1

0

0