குளிர்பானம் கொடுத்து மாணவிகள் பலாத்காரம்… வீடியோ எடுத்து மிரட்டிய ஆசிரியர் : இளைஞர்களும் பங்கு போட்ட கொடூரம்!!

Author: Babu Lakshmanan
28 January 2023, 2:42 pm
Quick Share

உத்தர பிரதேசத்தில் பல மாணவிகளை பயிற்சி ஆசிரியர் உள்பட ஏராளமான இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள யமுனை ஆற்றில் மாணவி ஒருவர் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது, அதனை கவனித்துக் கொண்டிருந்த அக்கம்பக்கத்தினர், மாணவியை மீட்டு, குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சிறுமியிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, திடுக்கிடும் வகையிலான தகவல்களை அவர் சொன்னார். பயிற்சி மையம் ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி, விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர்.

அதனை குடித்து சிறுமி மயக்கமடைந்த நிலையில், பயிற்சி மையத்தின் ஆசிரியர் மற்றும் அந்த மையத்தில் உள்ள இளைஞர்கள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோவும் எடுத்து உள்ளனர். இதன்பின், இதனை காட்டியே, சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்து உள்ளனர். இந்தக் கொடூரம் 12க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நடந்துள்ளது. ஆனால், அவர்கள் பயந்து வெளியே கூறாமல் இருந்து விட்டனர்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மாணவியை அழைத்து கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளதாக போலீசார் புகாரை பதிவு செய்ய மறுத்து விட்டனர் என கூறப்படுகிறது.

குளிர்பானங்களை ஏன் வாங்கி குடிக்கின்றாய்? என கேட்டு போலீசார் அந்த மாணவியை கன்னத்தில் அறைந்து உள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினர், உள்ளூரில் உள்ள தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர். அந்த தொண்டு அமைப்பு இந்த விவகாரம் பற்றி விசாரிக்கும்படி கோரிக்கை விடுத்து உள்ளது.

Views: - 98

0

0