15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த எஸ்.ஐ. : உடந்தையான தாய்… போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!!

25 June 2021, 10:47 am
SI arrest - updatenews360
Quick Share

சென்னை ; துப்பாக்கியை காட்டி மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மணலி காவல்நிலையத்தில் காவல்உதவி ஆய்வாளராக இருந்த சதீஷ்குமார் என்பவருக்கும், ரேஷன் கடையில் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையும் உல்லாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, அந்தப் பெண்ணின் 15 வயது மகள் அதனை பார்த்துள்ளார்.

இதனைக் கண்ட எஸ்.ஐ. சதீஷ்குமார், தங்களின் உறவு குறித்து வெளியே சொன்னால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணுடன் உல்லாசத்தை அனுபவித்து வந்த எஸ்.ஐ. சதீஷ்குமாருக்கு 15 வயது சிறுமியுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற கொடிய எண்ணம் எழுந்துள்ளது.

இதற்காக சிறுமியின் தாயிடம் ரூ.50 ஆயிரத்தை கொடுத்து சரிகட்டியுள்ளார். ஆனால், போலீஸ்காரரின் இந்த இச்சைக்கு சிறுமி அடிபணியாமல் போயுள்ளார். எனவே, துப்பாக்கியை காட்டி கொன்று விடுவேன் என மிரட்டி, சிறுமியையும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியுள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு சிறுமியும் தாயும், பெரியம்மாவும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதனால், ஏற்பட்ட உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளான சிறுமி, நடந்தவற்றை தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, சம்பவம் தொடர்பாக புழல் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், எஸ்.ஐ. சதீஷ்குமார் மற்றும் சிறுமியின் தாய், பெரியம்மா ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், காவலர் மீது துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

Views: - 226

0

0