வீட்டில் தனிமையில் இருந்த 16 வயது சிறுமி கர்ப்பம் : பக்கத்து வீட்டில் வசித்து வந்த 14 வயது சிறுவன் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2022, 7:47 pm
Abused Arrest -Updatenews360
Quick Share

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவார்கள் .

அப்போது வீட்டில் சிறுமி மட்டும் இருந்து வந்துள்ளார் . இவர்களின் வீடு அருகில் இன்னொரு குடும்பத்தினர் குடியிருந்து வந்துள்ளனர் .அவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார் .

பள்ளியில் படித்து வந்த மாணவன் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு செல்வது வழக்கம் .இந்நிலையில் பெற்றோரிடம் சிறுமி தனக்கு வயிற்றுவலி இருப்பதாக கூறியுள்ளார் .

இதனையடுத்து பெற்றோர் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர் .

சிறுமிக்கு 16 வயதே ஆவதால் இதுபற்றி ஆஸ்பத்திரி நிர்வாகம் குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர் .

இதில் சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற 14 வயது சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது .இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக சிறுவன் மிரட்டியதால் இதனை வெளியில் சொல்லவில்லை என சிறுமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 541

1

0