தமிழகத்தில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: இன்றைய கொரோனா நிலவரம்…!!

15 November 2020, 7:52 pm
Corona_Delhi_UpdateNews360
Quick Share

தமிழகத்தில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் மேலும் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 12 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,478 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 2,520 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,27,752ல் இருந்து 7,30,272 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 65,053 மாதிரிகளும் இதுவரை 1,10,72,885 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 64,213 பேருக்கும், இதுவரை 1,07,91,896 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Views: - 29

0

0