மேலும் 2 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா…! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
9 August 2020, 11:59 amதிருச்சி: மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் இப்போது கொரோனா தொற்றுகள் சில நாட்களாக குறைந்து வருகின்றன. ஆனால் மற்ற மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.
குறிப்பாக கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவ துறையினர், காவல்துறையினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு அவருடன் இருந்த கவுன்சிலர் கண்ணனுக்கு கொரோனா உறுதியானது.
இந்நிலையில் எம்.எல்.ஏ பரமேஸ்வரி ஒரு வாரமாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் பாசிட்டிவ் என்று உறுதியாகி உள்ளது.
இதனையடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்திற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.