நள்ளிரவில் அலறி துடித்த மக்கள்…! 2 பேர் பலி…! இது ஆந்திரா சோகம்

30 June 2020, 9:54 am
Quick Share

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 2 பேர் பலியாகினர்.

விசாகப்பட்டினத்தின் அருகே உள்ள பரவடா என்ற இடத்தில் ஒரு தனியார் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில்  நேற்று இரவு  11.30 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டது.

விபத்தில் 2 பேர் பலியாக, 4 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 மாதங்கள் முன்புதான் விசாகப்பட்டினத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக்கசிவில்  11 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் மயங்கி விழுந்து பாதிக்கப்பட்டனர்.

அதனால் நேற்று இரவு வாயுக்கசிவு ஏற்பட்ட செய்தி அறிந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். விபத்து  தொடர்பாக, அதிகாரிகளிடம்  விசாரித்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார். வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

Leave a Reply