‘எங்ககிட்டயும் கேட்டிருக்கனும்’.. ரூ.2000 திரும்பப் பெற்ற விவகாரம் ; ரிசர்வ் வங்கி மீது தமிழக அரசு அதிருப்தி..!!

Author: Babu Lakshmanan
20 May 2023, 11:34 am
Quick Share

புதுக்கோட்டை ; 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள அறிவிப்பு குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசனை செய்திருக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- தமிழ்நாட்டு அரசினுடைய நிலைப்பாடு என்பது இத்தகைய முடிவுகளை ரிசர்வ் வங்கி எடுக்கிற போது, இதில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய கருத்துக்களை ஏற்கனவே கேட்டிருக்க வேண்டும் என்பது தான்.

மாநிலத்திலிருந்து நிறைய நபர்கள் உள்ளனர், மாநில அரசாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் முறைப்படி இது போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற முடிவுகளை எடுக்கும் போது கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.

ஒரு முடிவை எடுக்கும்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கும்போது இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. அப்போது திமுக எதிர்த்து உள்ளது.

அதற்கு மாறுபட்ட நடவடிக்கைகளை பிற்காலத்தில் எடுக்கும் போதும் சம்பந்தப்பட்ட இருக்கக்கூடிய மாநில அரசுகளாக இருக்கக்கூடிய அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடமும், இது போன்ற விஷயங்களில் கொள்கை முடிவு எடுக்கும்போது கலந்து ஆலோசனை செய்திருப்பது முறையாக இருந்திருக்கும், எனக் கூறினார்.

Views: - 334

0

0