2020ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Author: Babu
12 October 2020, 3:41 pm
nobel prize medical - updatenews360
Quick Share

2020ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிக உயரிய கவுரவ விருதாக கருதப்படும் நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த நோபல் பரிசுக்கு 211 தனிநபர்களும், 107 அமைப்புகளும் போட்டியில் இருந்தனர்.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்மில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் நோபல் பரிசுக்குரியவர்களை தேர்வு செய்யும் குழு, நோபல் பரிசை அறிவித்து வந்தது.

இதுவரையில், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை அமெரிக்காவைச் சேர்ந்த பால் ஆர். மில்கிரோம், ராபர்ட் பி வில்சன் ஆகியோர் வென்றுள்ளனர்.

ஏலக்கோட்பாட்டில் மேம்பாடு மற்றும் புதிய ஏல முறைகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 57

0

0