கூட்டணிக்கு குட்-பை : தனித்து களமிறங்கும் தேமுதிக… உறுதிபடுத்தியது சுதிஷின் முகநூல் பதிவு…!!!!

1 March 2021, 8:30 pm
Vijayakanth - updatenews360
Quick Share

சென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக, தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கி விட்டு, அடுத்து பாஜக, தேமுதிக என அடுத்தடுத்த கட்சிகளுடனும் அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாஜகவுடனான பேச்சில் முன்னேற்றம் காணப்பட்டாலும், தேமுதிக சற்று கரார் காட்டுவதாகவே கூறப்படுகிறது.

CM Wish Vijayakanth - updatenews360

அதாவது, 12 தொகுதிகளை ஒதுக்குவதாக அதிமுக கூறியதாகவும், குறைந்தது பாமகவிற்கு ஒதுக்கி 23 தொகுதிகளாவது தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேமுதிக கூறி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிமுக – தேமுதிக கூட்டணியில் இழுபறி நிலவி வருகிறது.

இந்த நிலையில், தேமுதிகவின் துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில், “நம் முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என்பதை பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, கமல்ஹாசன் – தினகரன் தரப்பில் முதலமைச்சர் வேட்பாளரில் சிக்கல் நிலவி வருவதால், இருவரின் கூட்டணியிலும் விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பது சந்தேகம்தான். எனவே, தேமுதிக தனித்து போட்டியிடுவது உறுதியாகி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

Views: - 133

1

0