அதிமுக, பாஜக தொகுதி பங்கீட்டு இழுபறிக்கு காரணம் இதுவா..? அடுத்தது என்ன… திட்டமிடும் பாஜக..!!

2 March 2021, 7:11 pm
EPS - murugan- updatenews360
Quick Share

அதிமுக – பாஜக இடையிலான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு தொடர்பாக அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து சுமூகமாக கூட்டணியை உறுதி செய்து விட்டது. இதைத் தொடர்ந்து, பாஜகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும், இருகட்சியினரிடையே உடன்பாடு ஏற்படவில்லை.

admk meet - updatenews360

காரணம், அதிமுகவின் அடிமடியிலேயே கைவைப்பதுதான். அதிமுகவின் எஃகு கோட்டையான கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகளை பாஜக கேட்பதால் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வானதி சீனிவாசன், அண்ணாமலை போன்ற முக்கிய நிர்வாகிகள் பலர் கோவை தொகுதியில் இருப்பதால், அதிமுகவிற்கு அடுத்த படியாக, பாஜகவிற்கு அதிக வாக்கு வங்கி உள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், தொகுதியை பெற்றுக் கொண்டால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என பாஜக மனக்கணக்கு போட்டு வருகிறது.

Cbe Bjp - Updatenews360

அதேவேளையில், ஜெயலலிதா இல்லாமல் அதிமுக சந்திக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால், இந்தத் தேர்தல் மிகவும் சவாலானதாக இருக்கும். அப்படியிருக்கையில், அதிமுகவின் வலுவான தொகுதிகளை தாரை வார்க்க அதிமுகவும் தயாராக இல்லை. இதனால், இருகட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிஷண்ரெட்டி, பாஜக மாநில தலைவர் எல்.முருகன், துணை தலைவர் அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்னும் ஒரு சில தினங்களில் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Views: - 159

0

0