காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்காக 90 ஆண்டுகளில் 19வது முறையாக ஜூன் 12ம் தேதி இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையை திறந்துவைத்த பின் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் நலன் காக்க அரசு பாடுபடும். குறுகிய காலத்தில் 5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உழவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. காவிரி நீரை திறம்பட பயன்படுத்தி சாகுபடியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர், பிரதமர் மோடி மீது மத்திய உள்துறை அமித் ஷாவுக்கு என்ன கோபமோ என்று தெரியவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்தை வரவேற்றார். தமிழர் பிரதமரானால் மகிழ்ச்சி தான். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உள்நோக்கம் என்னெவென்று தெரியவில்லை, தமிழர் பிரதமர் ஆவதை திமுக தடுத்ததாக வெளிப்படையாக சொன்னால் விளக்கம் தரப்படும்.
எனவே, தமிழரை பிரதமராக்க வேண்டும் என்பதன் மூலம் பிரதமர் மோடி மீது அமித்ஷாவிற்கு என்ன கோபம் என தெரியவில்லை என முதல்வர் விமர்சித்தார். 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எல்.முருகன் ஆகியோருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என நம்புகிறேன். பாஜக ஆட்சியில் எந்த திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை, தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்த திட்டங்கள் குறித்து நான் கேட்ட கேள்விக்கு நேற்று வேலூர் கூட்டத்தில் அமித்ஷா பதில் தரவில்லை.
9 ஆண்டு கால சாதனை குறித்து நான் கேட்ட கேள்விக்கு இதுவரை அமித்ஷா பதில் தரவில்லை எனவும் கூறினார். திமுக ஆட்சியில் இருந்தவரை எய்ம்ஸ் என்றே ஒன்றே தேவைப்படவிலை, மருத்துவ சேவை தரமாக இருந்தது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்தது மத்திய அரசு, அதனால் என்ன ஆனது என்று கேள்வி கேட்டேன். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டுக்கு எண்ணற்ற திட்டங்கள் கிடைத்தன.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் சென்னை மெட்ரோ ரயில் திட்டம், தமிக்கு செம்மொழி அந்தஸ்து போன்றவை கொண்டு வரப்பட்டது. தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம் உள்ளிட்ட காங்கிரஸ் ஆட்சியின்போது வந்த பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார் முதல்வர். மேலும் இதனிடையே பேசிய முதல்வர், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக அவர் மாற்றினார்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார். இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பு இல்லை. அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை, திட்டமிட்டு பொய் தகவல்களை பரப்புவது இபிஎஸ்-க்கு கைவந்த கலை எனவும் விமர்சித்தார்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.