அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கி விடுமுறையா?: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

Author: Aarthi Sivakumar
26 September 2021, 3:25 pm
Quick Share

புதுடெல்லி: அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுதும் வங்கிகளுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக் கிழமைகளில் முழு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்படி இந்தாண்டு அக்டோபர் 9, 23 ஆகிய இரண்டு நாட்களும் முழு விடுமுறை.

அக்., 2 சனிக்கிழமையன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை.

reserve bank - updatenews360

அக்., 3, 10, 17, 24, 31 ஆகிய ஐந்து நாட்களும் ஞாயிற்றுக் கிழமை. இது தவிர அக்., 14, 15ல் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை.

அக்., 19ல் மிலாடி நபி விடுமுறை. மேற்கண்ட 11 நாட்களும் நாடு முழுதும் வங்கிகளுக்கு முழு விடுமுறை.

மேலும், 10 நாட்கள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்., 1 அரையாண்டு கணக்கு முடிவு சிக்கிம். அக்., 6 மஹாளய அமாவாசை திரிபுரா, கர்நாடகா, மேற்கு வங்கம். அக்., 7 மேரா சவுரென் ஹவுபா லெய்னினங்தோ சனமஹி மணிப்பூர்

அக்., 12 மஹா சப்தமி திரிபுரா, கர்நாடகா. அக்., 13 மஹா அஷ்டமி திரிபுரா, ஒடிசா, சிக்கிம், அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம், பீஹார், ஜார்க்கண்ட். அக்., 16 துர்கா பூஜா சிக்கிம். அக்., 18 கதி பிஹு அசாம்

அக்., 20 மகரிஷி வால்மிகி ஜெயந்தி திரிபுரா, கர்நாடகா, சண்டிகர், மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம். அக்., 22 மிலாடிநபியை தொடர்ந்து வரும் வெள்ளி ஜம்மு – காஷ்மீர். அக்.,26 அக்செஷன் டே ஜம்மு – காஷ்மீர். இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Views: - 137

0

0