21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் : மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
28 November 2021, 8:30 am
Rain- Updatenews360
Quick Share

சென்னை : சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- குமரிக்கடல் மற்றும் அதனையொட்டி கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்தும் வாங்கும். இதைத் தவிர்த்து, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை கனமழைக்கும், நாளை மறுதினம், துாத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஹசென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன், கன மழை முதல் மிக கன மழை பெய்யலாம்.

நாளை, தெற்கு அந்த மான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகரும். அப்போது, பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடற்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 180

0

0