மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 21ம் தேதி திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்
19 September 2020, 1:21 pmசென்னை : வரும் 21ம் தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்ட மசோதாக்களுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு அளித்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் வரும் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 3 சட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.