இன்னும் 10 நாட்கள் தான்…! ஓட தயாராகும் 2600 ரயில்கள்..!

23 May 2020, 6:34 pm
corona train - updatenews360
Quick Share

டெல்லி: அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக நடைமுறையில் உள்ள 4ம் கட்ட ஊரடங்கின் போது சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் கூறியதாவது:

மொத்தம் 17 ரயில் மருத்துவமனைகள் கொரோனா பராமரிப்புக்காக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு இருக்கின்றன. ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் 35 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்பி இருக்கின்றனர்.

அடுத்த 10 நாட்களில், 36 லட்சம் புலம்பெயர்ந்தவர்கள் சிறப்பு ரயில்களில் பயணிக்க உள்ளனர். 4 நாட்களில் மட்டும் தினமும் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் இயற்கை பேரழிவாக காரணமாக மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து எனக்கு தகவல் தரப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் எப்போது ரயில்களை இயக்க முடியும் என்பதை விரைவில் கூறுவார்கள்.

அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தவுடன், நாங்கள் மேற்கு வங்கத்திற்கு ரயில்களை இயக்குவோம். நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜூன் 1 முதல் 200 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறினார்.

Leave a Reply