நானும் சோல்ஜர் ஆவேன்.. ராணுவத்திற்கு கடிதம் எழுதிய வயநாடு சிறுவன்: ராணுவம் அனுப்பிய சோ ஸ்வீட் பதில்…!!
Author: Sudha4 August 2024, 8:27 am
வயநாடு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் இன்னும் பலரை தேடும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது.வயநாடு நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் 500 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் 2 தினங்களுக்கு முன்பு வெறும் 31 மணி நேரத்தில் இரும்பாலான 190 மீ பாலத்தை முண்டக்கை – சூரல் மலை பகுதிகளுக்கு இடையே அமைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.ராணுவ வீரர்களின் மீட்புப் பணிகளால் ஈர்க்கப்பட்ட ரேயன் என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் AMLP பள்ளி மாணவர் மலையாளத்தில் கடிதம் ஒன்றை ராணுவத்திற்கு எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அன்புள்ள இந்திய ராணுவமே எனது அன்பிற்குரிய வயநாடு ஒரு பெரிய நிலச்சரிவினால் தாக்கப்பட்டு அழிவை சந்தித்துள்ளது. இடுபாடுகளில் சிக்கியவர்களை நீங்கள் காப்பாற்றுவதை பார்த்து நான் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன்.மேலும் 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை விடவும் மலைபாங்கான கிராமப்புறங்களை உள்ளடக்கிய தேயிலை தோட்டங்களுக்கு புகழ்பெற்ற வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மிகவும் மோசமானது ராணுவ வீரர்களின் சேவையால் நான் கவரப்பட்டேன். உங்களைப்போலவே ராணுவத்தில் நானும் சோல்ஜர் ஆக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.அதற்கு பதில் அளித்த ராணுவம்…
அன்புள்ள மாஸ்டர் ராயன்,
உங்கள் இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்களை ஆழமாகத் தொட்டன. இக்கட்டான காலங்களில், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம், உங்கள் கடிதம் இந்தப் பணியை மீண்டும் ஆழப்படுத்துகிறது. உறுதியுடன் பணியாற்ற ஆற்றல் தருகிறது.உங்களைப் போன்ற ஹீரோக்கள் எங்களால் முடிந்ததைச் செய்ய எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். நீங்கள் சீருடை அணிந்து எங்களுடன் நிற்கும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு நமது தேசத்தை பெருமைப்படுத்துவோம்.
இளம் வீரரே, உங்கள் தைரியத்திற்கும் உத்வேகத்திற்கும் நன்றி.
“ஆயிரம் நன்றி”என்று அந்த பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனதை நெகிழச்செய்யும் இந்த கடிதத்தை சமூக வலைத்தளத்தில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
0
0