கோயம்பேட்டில் இருந்து 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு இணைப்பு பேருந்துகள் அறிவிப்பு….!!

10 November 2020, 5:10 pm
koymabedu town bus - 101120
Quick Share

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும், 5 பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதாக சென்றிட, சிறப்பு இணைப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகளை நாளை முதல் 13ம் தேதி வரை 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களும் சென்னையில் இருந்து இயக்கப்படும் 9,510 பேருந்துகளில், 11ம் தேதி 2,225 பேருந்துகளும், 12ம் தேதி 3,705 பேருந்துகளும், 13ம் தேதி 3,580 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5,247 பேருந்துகள் என 14, 757 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பேருந்துகள் மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.

Views: - 22

0

0