தமிழகம், ஆந்திர கோவில்களில் கலசங்களை திருடி புதுச்சேரியில் விற்பனை : ஆசிரியர் உட்பட 4 பேர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan3 October 2021, 8:33 pm
ஆந்திரா : திருத்தணி மற்றும் சித்தூரில் கோயில் கலசங்களை திருடி புதுச்சேரியில் ரூ.
25 லட்சத்திற்கு விற்பனை செய்த ராணிப்பேட்டையை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 27 ஆம் தேதி சித்தூர் மாவட்டம் கங்காதர நெல்லூர் அடுத்த ஆரவசேணுப் பள்ளியில் உள்ள கோவில் கலசத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். புகாரின் பேரில் கங்காதரர் நெல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்
இந்நிலையில் நேற்று காலே பள்ளி கிராஸ் அருகே கங்காதரநெல்லூர் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர்.ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்ற நிலையில் அதை விரட்டிச் சென்ற போலீசார் காரை மடக்கிப்பிடித்து அதிலிருந்த 4 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் காரில் இருந்வர்கள் திருத்தனி தாலுக்கா எல்எல் கண்டிரிகை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ராணிப்பேட்டை மாவட்டம் பாண்டியன் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், அரிகிலபாடி கிராமத்தை சேர்ந்த பாண்டியன், சித்தூர் மாவட்டம் புத்தூரைச் சேர்ந்த ஐராலா அரசு பள்ளி ஆசிரியர் சக்கரவர்த்தி என்பது தெரியவந்தது.
மேலும் கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்களை திருடி புதுச்சேரியை சேர்ந்த சேதுபதி, கணேஷ் ஆகியோருக்கு விற்றது தெரிய வந்தது. ஒவ்வொரு கலசம் 25 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். மதனப்பள்ளி, திருப்பதி, காளஹஸ்தி,புங்கனூர் உள்ளிட்ட நகரங்களில் புதையல் இருப்பதாக தெரிவித்து அவர்கள் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
தமிழகத்தின் திருத்தணி தாலுகா கே,ஜி கண்டிரிகையில் உள்ள பழமை வாய்ந்த ஆஞ்சநேய சுவாமி கோயிலில் கலசத்தையும் அவர்கள் திருடிச் சென்றது. விசாரணையில் தெரியவந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த கார், பல லட்சம் மதிப்புள்ள இரண்டு பஞ்சலோக கலசங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
0
0