4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : நீலகிரியில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்!!
21 September 2020, 2:05 pmசென்னை : நீலகிரி, கோவை உள்பட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் லேசானது அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தென்மேற்கு , மத்திய மேற்கு, கடலோர, தென்கிழக்கு, மத்திய கிழக்கு பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நீலகிரி சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0
0