4 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

12 November 2020, 2:12 pm
rain tn - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும், மிதமான மழையும் பெய்து வருகிறது. அதேபோல, வடதமிழக கடற்பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 தினங்களுக்கு, மிதமான மழையும், அவ்வபோது கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 20

0

0