5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர் : தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு

15 May 2021, 6:40 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கான உலகளாவிய டெண்டர் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கிடுகிடுவென அதிகரித்து வரும் நிலையில், இந்த நோய் தொற்றிற்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனிடையே, கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, 18 – 45 வயதுடையவர்களுக்கான கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளே கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசும் அறிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்திற்கு 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், 18 முதல் 45 வயதுள்ள நபர்களுக்கு போதுமான தடுப்பூசி இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Corona_Vaccine_UpdateNews360

எனவே, உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கு ஜூன் 5-ம் தேதி காலை 11 மணிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அன்றைய தினம் பகல் 12 மணிக்கு டெண்டர் திறக்கப்பட்டு, தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான நிறுவனம் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 62

0

0