கிரீஸ் நாட்டை அதிர வைத்த பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு..!!

Author: Aarthi Sivakumar
19 October 2021, 4:32 pm
Quick Share

கர்பத்தோஸ்: கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது.

கிரீஸ் நாட்டின் தென்கிழக்கில் கர்பத்தோஸ் நகரில் இருந்து 149 கி.மீ. தொலைவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் 37.84 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

Views: - 319

0

0