புனேவில் இருந்து தமிழகம் வந்த 6 லட்சம் டோஸ்கள்… தடுப்பூசி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை..!!!

20 April 2021, 4:57 pm
corona dose - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை தடுக்கும் விதமாக, 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்துள்ளன.

நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி, அதிகம் பாதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்திய முதல் இடத்தை பிடித்து விட்டது. நாளொன்று 2.50 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கையும் முன்பை விட கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதனால், பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதுவரையில் 12.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தது. அதன்படி, புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா தடுப்பூசி தடையின்றி கிடைப்பதற்காக கூடுதல் டோஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மே மாதத்தில் கொரோனாவின் தாக்கம் பெரும் அளவில் இருக்கும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதால், இந்த மாத இறுதிக்குள் கூடுதலான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை போட திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுவரையில் 48 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும், தகுதியானவர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகிறது.

Views: - 73

0

0