ஆளுநருக்கு இன்னும் 60 நாள்தான் டைம்… வெயிட் அண்ட் வாட்ச் : எச்சரிக்கை விடுத்த திமுக பொருளாளர் டிஆர் பாலு எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2023, 9:34 am
R Balu - Updatenews360
Quick Share

அடுத்த 60 நாட்கள் காத்திருப்போம் அதுக்கு மேல் என்ன நடக்க போகின்றது என்பதை பார்க்க தான் போகின்றீகள் என திமுக பொருளாளர் டி ஆர் பாலு பேசியுள்ளார்.

மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சென்னை அம்பத்தூர் பாடியில் நடைபெற்றது.

இதில் திமுக பொருளாளர் டி ஆர் பாலு , அமைச்சர் சேகர்பாபு , சட்டமன்ற கொறாடா கே.வி செழியன் உள்ளிட்ட ஏராளமான திமுகவின் கலந்து கொண்டனர்.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மேடை பேச்சு, பேராசிரியர் அன்பழகன் தங்களின் ரத்தத்திலும் , உயிர் அணுக்களில் கலந்து இருக்கின்றார்.

அமைச்சர் சேகர்பாபுவிடம் எதை சொன்னாலும் No என்று சொல்லவே மாட்டார் முடித்து காட்டுவார். ஆலயம் பணியினை சிறப்பாக செய்து வருகின்றார் அமைச்சர் சேகர்பாபு.

கட்சியில் சில சில பிரச்சினைகளை தொண்டர்களுடன் இருந்தால் விட்டு கொடுத்து செல்ல வேண்டும் என்று பேராசிரியர் சொல்வார்.
சுயமரியாதை பிரச்சாரத்தை ஒவ்வொருவரும் தனி மனித ஒழுக்கத்துடன் செய்யல்பட வேண்டும்.

போலீஸ் தொழிலில் இருக்கும் ஒரு ஆள் இங்கு வந்து இருக்கின்றார். நேர்மையாவும் , தூய்மையாகவும் இல்லாத ஒரு நபர் ஆளுனராக உள்ளார்.

ஆளுநர் ரவி சொல்கின்றார் சனாதனம் தான் பெரியது என சொல்கின்றார். புதிய கல்வி கொள்கை , நீட் தேவை என சொல்ல கவர்னர் நீ யார் ?

திருவள்ளுவருக்கு சாதி , மதத்தை அடையம் செய்கின்றார் அது ஒரு பொதுமறை. கவர்னரே தேசிய கீதம் பாடும் போது திரவிட உக்கல வங்க என்று வரும் போது தெரியம் இருந்தால் உட்கார்ந்து பார்… பிஜேபி ஆட்சி இனி தொடராது.

காங்கிரஸ் கட்சி சாதாரண கட்சி இல்லை மிக பெரிய கட்சி இப்போது இப்படி இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக மீண்டும் உயரத்தில் வரும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.

காங்கிரஸ் கட்சி கொஞ்சம் ஒத்துழைத்தால் போதும் எங்களுக்கு. 361|4 அரசியலமைப்பு சட்டம் சரத்து உங்கள் மேல் தொங்கிகொண்டு இருக்கின்றது. நீ ஒன்று அசைத்து பார்க்க முடியாத ஆள் இல்லை கவர்னரே .

நாளை அல்லது நாளை மறுநாள் நோட்டீஸ் அனுப்படும் அடுத்த 60 நாட்கள் காத்திருப்போம் அதுக்கு மேல் என்ன நடக்க போகின்றதை பார்க்க தான் போகின்றீகள் என டி.ஆர் பாலு எச்சரிக்கை விடுத்துள்ளார். தளபதி முக.ஸ்டாலின் ஆட்சி செங்கோட்டையில் பறக்கும் என்றும் தெரிவித்தார்.

Views: - 341

0

0