69% இடஒதுக்கீட்டு எதிரான வழக்கு : 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
2 February 2021, 1:09 pmசென்னை : தமிழகத்தில் 69 % இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருந்து வருகிறது. இந்த இடஒதுக்கீட்டினால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆனால், இந்த ஒதுக்கீட்டிற்கு எதிராக மருத்துவ மாணவி காயத்ரி, சஞ்சனா, அகிலா மற்றும் அன்னபூரணி உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இட ஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்ற நிலையில், தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் முறையிடப்பட்டது. இந்த 69% இடஒதுக்கீட்டினால் பலர் பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுததப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன், வழக்கையும் ஒத்திவைத்தனர்.
0
0