மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு : அரசிதழில் வெளியீடு..!!

6 November 2020, 4:23 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. அதனடிப்படையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில், 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்க வகையில் செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த மசோதா தமிழக சட்டப்பேரவையிலும் கடந்த மாதம் 15ம் தேதி நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆளுநரும் அதிரடியாக ஒப்புதல் அளித்தார்.

இதன்மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 300 பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் குறித்த அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Views: - 20

0

0