தமிழகத்தில் மேலும் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

Author: Babu Lakshmanan
7 August 2021, 8:05 pm
TN Secretariat- Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் மேலும் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நில நிர்வாக இணை ஆணையராக செந்தாமரையும், பொதுப்பணித்துறை இணைச்‌ செயலாளராக மகேஸ்வரி ரவிக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல,
கூட்டுறவு சங்கங்களின்‌ கூடுதல்‌ பதிவாளராக அருணாவும், குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தின்‌ கூடுதல்‌ இயக்குநராக ஸ்ரவண்குமார்‌ ஜதாவத்தும்‌, வீட்டு வசதி மற்றும்‌ நகர்ப்புற ,
வளர்ச்சித்துறை துணைச்‌ செயலாளராக ஆனி மேரி ஸ்வர்ணாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்துறை இணை செயலாளராக ஜான்‌ லூயிஸும்‌, சென்னை பெருநகர்‌ வளர்ச்சிக்‌ குழுமத்தின்‌ சி.இ.ஒ.வாக லட்சுமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 579

1

0