7 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம் : தமிழக அரசு அதிரடி உத்தரவு
Author: Babu Lakshmanan16 August 2021, 8:19 pm
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாகப் பதவி வகித்து வரும் தேஷ்முக் ஷேகர் சஞ்சய், தமிழ்நாடு சிறப்புப் படை 6-வது பட்டாலியன் பிரிவு (மதுரை) கமான்டண்ட்டாகவும், சென்னை ரயில்வே எஸ்.பி.யாகப் பதவி வகித்து வரும் தீபா சத்யன், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, தமிழ்நாடு சிறப்புப் படை 6-வது பட்டாலியன் பிரிவு (மதுரை) கமான்டண்ட்டாகப் பதவி வகித்து வரும் இளங்கோ, சென்னை ரயில்வே எஸ்.பி.யாகவும், ராமநாதபுரம் கடலோரப் பாதுகாப்புக் குழு எஸ்.பி.யாக இருந்த ஜெயந்தி, சேலம் மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாகவும், சேலம் மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாகப் பொறுபபு வகித்து வந்த மகேஷ்குமார், நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ரயில்வே ஐஜியாக கல்பனா நாயக்கும், சென்னை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜியாக அபின் தினேஷ் மோதக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0
0