தமிழகத்தில் அக்.,30ம் தேதி 7வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Author: Babu Lakshmanan
26 October 2021, 11:46 am
Minister Subramaniam- Updatenews360
Quick Share

தமிழகத்தில் வரும் அக்டோபர் 30ம் தேதி 7வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையிலும், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பல்வேறு கட்டங்களாக முகாம் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது.

அசைவப் பிரிவுகள், மதுப் பிரியர்களுக்காகவே கடந்த வாரம் சனிக்கிழமை இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், வரும் 30ம் தேதி 7வது கட்ட தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் குறைவானவர்கள்தான் 2வது கட்ட கோவேக்ஸின் தடுப்பூசி போட வேண்டி இருப்பதாகவும் அவர் கூறினார்.

Views: - 515

0

0